வடமராட்சி கால்ப்பந்தாட்ட சங்கத்தின் விசேட கலந்துரையாடல்

0
649 views

வடமராட்சி கால்ப்பந்தாட்ட சங்கத்தின் விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை சங்கத்தலைவர் இல்லத்தில் இடம்பெற்றது. கால்ப்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றுக்குழுத் தலைவர் ரி.வரதராசன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கை கால்ப்பந்தாட்டச் சங்கத்தால் நடத்தப்படும் எவ்.ஏ கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அப்போட்டியில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக 1000 ரூபா விண்ணப்ப கட்டணத்தை ஹற்றன் நஷனல் வங்கியில் வைப்புச்செய்து அதன் பற்றுச்சிட்டையை விண்ணப்பத்துடன் இணைத்தல்.

அத்துடன் வருடாந்த பொதுக்கூட்டத்தை விரைவில் நடாத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுதல், 27ஆம் திகதி விசேட பொதுக்கூட்டத்தில் படிவங்களை வழங்குதல்.

மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை துரித அபிவிருத்தி திட்டத்திற்கு, கழகங்களின் உதவியோடு ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்குதல். ஒவ்வொரு கழகமும் 5000 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத நிதியினை 13ம் திகதிக்கு முன்னர் கடிதத்துடன் தலைவரிடம் வழங்குதல்.போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இக் கலந்துரையாடலில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அ.வசந்தன், சி.வசந்தகுமார் மற்றும் கழகங்களின் தலைவர் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here