மரண அறிவித்தல்
அமரர் சின்னையா நடராஜசிவம்
(மூத்த ஒலிபரப்பாளர், திரைப்பட மற்றும் நாடக நடிகர்,
சூரியன் FM இன் முன்னைநாள் முகாமையாளர்)
பிறப்பு :- 1946.04.21 இறப்பு :- 2020.06.24
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும்
கொண்ட அமரர் சின்னையா நடராஜசிவம் 24.06.2020 புதன்கிழமை இரவு காலமானார்
அன்னார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளரும் தொலைக்காட்சி நாடக,
மற்றும் திரைப்பட நடிகருமாவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை மற்றும் கொழும்பு சர்வதேச வானொலியின் வர்த்தக சேவை ஆகியவற்றில் நீண்டகாலம் கடமையாற்றிய முன்னணி ஒலிபரப்பாளரும் சூரியன் FM வானொலியின் ஆரம்பகால முகாமையாளரும் ஆவார்.
அன்னார் திரு திருமதி சின்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னணி ஒலிபரப்பாளரும் ,
வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவருமான திருமதி புவனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்
திவாகரின் அன்புத் தந்தையும் ஆவார்
அன்னாரின் புகழுடல் ஜெயரத்ன மலைச்சாலையில் 25.06.2020 வியாழக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.







