2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் 05.06.2020 இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண இதை தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.
சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிரகணத்தை பார்க்கும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







