வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதான குருக்கள் திரு.தண்டாயுதபாணி
தேசிகர் அவர்களின் புதல்வர் மாதவன் ஐயா குடும்பத்தினர் மந்திகை வைத்தியசாலைக்கு 25 இலட்சம் ரூபா அன்பளிப்பு வழங்கியுள்ளனர்.
புற்றளைப்பிள்ளையார் கோவிலடி அமரர் விஐயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகமார்த்தமாக சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மாதவன் ஐயா குடும்பத்தினா – மாதவன் ஐயா (மருமகன்), கீதா(மகள்) , (பேரப்பிள்ளைகள்) கோபிகா , கீர்த்திகா, சாருகா ஆகியோரால் பருத்தித்துறை (மந்திகை)ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நல விடுதி (Paediatric ward) விடுதி இலக்கம் – 08 இனை புனரமைப்பதற்காக ரூபா 25 லட்சம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாதவன் ஐயா அவர்கள் குரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் வல்வெட்டித்துறை முழுவதும் உணவு வழங்கிய செய்திகளை நமது இணையத்தில் பதிவு செய்திருந்தோம்
அத்துடன் ஊரடங்கு பாதிப்பில் இருந்த சைவ குருமாருக்கு நேரடியாக நிதி உதவிகளை வழங்கியிருந்தார்
மாதவன் ஐயா குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்துகிறோம்









