இறுதிக்கிரியை விபரம் – திரு சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன் பிரபல சட்டத்தரணி இலங்கை)

0
862 views

இறுதிக்கிரியை விபரம்

திரு சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன் பிரபல சட்டத்தரணி இலங்கை)
தோற்றம் – 17.09.1948                                                      மறைவு – 07.03.2020
காலஞ்சென்றவர்களான திரு கதிரிப்பிள்ளை சோமசுந்தரம், திருமதி பரமநாயகம் சோமசுந்தரம்
ஆகியோரின் புதல்வரும்
காலஞ்சென்றவர்களான திரு பாலசிங்கம் திருமதி ஞானகலாம்பிகை பாலசிங்கம் ஆகியோரின் மருமகனும்
திருமதி சரஸ்வதி (ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்புக் கணவனும் ஆவார்.

அன்னார் திருமதி தாருணி பாலேஷன், வினோபா ,செல்வி ப்ரீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்
திரு.பா.பாலேஷன் அவர்களின் அன்பு மாமனாரும்
செல்வி பா.ஆதுஷியின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னார் திரு.பா.சிவபாதசுந்தரம் (பழனி), திரு.பா.சிவசுந்தரம் (குட்டிப்பழனி), திரு.பா.சிவகாமசுந்தரி ,காலஞ்சென்ற திருமதி பொ.மகாலக்ஸ்மிதேவி (குட்டியாச்சி), காலஞ்சென்ற திரு.சோ.சிவயோகசுந்தரம் (அருச்சுணர்),
திரு சிவஞானசுந்தரம் (லெச்சி) , காலஞ்சென்ற திரு சோ.சிவநேசசுந்தரம் (குட்டி), திருமதி ப.சிவலோகசுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னார் சரோஜினிதேவி, சத்தியவதிதேவி ,ராஜேந்திரா, காலஞ்சென்ற மகேந்திரன் ,ரவீந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கரியைகள் வல்வை வேம்படியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 10.03.2020 நாளை செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணிக்கு நடைபெற்று
பூதவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்
திரு சிவஞானசுந்தரம் (லெச்சி)- 0094772760949
திரு. வினோபா (மகன்) – 0094776127157

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here