முதன்முறையாக யாழில் தேனீ தினம்!

0
559 views

உலக தேனீ தினம் இலங்கையில் முதன் முறையாக நேற்றைய தினம் (20) யாழில் கொண்டாடப்பட்டது.

இதன் நோக்கம் மகரந்த சோ்க்கையினால் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் இது கொண்டாடப்பட்டது.

முதன் முதலில் யாழ்ப்பாணம் காரைநகா் கோவளம் பகுதியில் உள்ள ஞானியா் முருகன் கோயிலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கோவளம் பகுதி தேனீ கிராமம் என விவசாய திணைக்களத்தால் பாிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கழைக்கழக மாணவனும், அவருடன் ஞானியா் முருகன் கோயில் பூசகரும் இணைந்து முதன் முதலில் ஞானியா் பகுதியில் தேனீ வளா்ப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அவா்களுக்கான ஊக்கம், உதவிகளை விவசாயதிணைக்களம் வழங்கி இருந்தது. இதனைத் தொடா்ந்து குறித்த கிராமத்தில் உள்ள அனைவரும் தேனீ வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சா்வதேச தேனீ தினம் கொண்டாடும் முகமாக வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களின் விவசாய திணைக்கள உயர் அதிகாாிகள், மற்றும் தேனீ வளா்ப்பில் ஆா்வம் உள்ள பலா் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனா்.

இதன் போது தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம், பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம், ராணி தேனீயை எவ்வாறு பிாிப்பது, தேனீ வளா்ப்பின் கால எல்லைகள் தொடா்பில் பலா் தமது சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here