கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலைய உதைபந்தாட்ட தொடர் அடுத்த சுற்றுக்குள் வல்வை அணி

கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலையமானது 60 ஆண்டினை (வைரவிழா) வடமராட்சி, பருத்தித்துறை லீக் இலிருந்து அழைக்கப்பட்ட 16 கழகங்களுக்கப்பட்ட இடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்றைய தினம்(24/02/2019) இடம்பெற்ற போட்டியில் நவிண்டில் கலைமதி அணியினுடனான போட்டியில் வல்வை அணியானது 3−1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது… வல்வை அணி சார்பாக ப.பிரசாந் 2 கோல்களையும், ச.பிரசாந் 1 கோலையும் பெற்றுக்கொடுத்தனர்…
ஆட்டநாயகனாக வல்வை அணியைச் சேர்ந்த ச.பிரசாந் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் நீண்ட காலத்திற்கு பின்னர் வல்வை அணியின் அனைத்து வீரர்களினதும் சிறப்பான பந்து பரிமாற்றத்தினை காணக்கூடியதாக இருந்தது…
மேலும் இன்றைய வல்வை அணியானது புதிய ஜெர்சியில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.. அதற்கான அன்பளிப்பினை பா.வசந்த் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது..
வாழ்த்துக்கள் வல்வை அணி வீரர்களுக்கு……








