வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2019

0
777 views

வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2019

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 09.02.2019 சனிக்கிழமை (நேற்று) வல்வை தீருவில் விளையாட்டு மைதானத்தில் வித்தியாசாலையின் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின் தலைமையில் பி.ப 1.30 மணியளவில் ஆரம்பமானது. திருமதி சுதர்சினி சிறிகாந்தன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – கணிதம், வடமராட்சி) அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன் விளையாட்டுக்களில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிக் கௌரவித்திருந்தார். இவ் விளையாட்டு நிகழ்விற்கு பழையமாணவர் சங்கத்தின் ஊடாக 2012 ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) மாணவர்கள் அனுசரனை வழங்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here