பயிற்றுவிப்பாளர்களின் கவனயீனம் காரணமாக வடமாகாணத்தின் பதக்கங்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டி சசுகததாஸ விளையாட்டு அரங்கில் இடம் பெற்று வருகின்றது. இதில் வடமாகாணத்துக்கான பதக்க எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோலூன்றிப்பாய்தல் மற்றும் எறிதல் நிகழ்ச்சிகளில் வடமாகாண பிரபல பாடசாலைகள் முன்னணியில் திகழ்ந்து பதக்கங்களின் எண்ணிக்கை குவிந்து காணப்படும்.
இவ்வருடம் இடம்பெற்ற போட்டிகளில் பிரபல பாடசாலை பயிற்றுவிப்பாளர்களின் சரியான வழிநடத்தல்கள் இன்மையால் பல பதக்கங்கள் பெறக்கூடிய நிலையிருந்தும் தவறவிடப்பட்டுள்ளது .
கடந்த வருடம் வடமாகாணம் 6ஆம் இடத்தில் இருந்தது. இவ்வருடம் இந்த பதக்கங்களின் வீழ்ச்சியால் தரவரிசையிலும் பின்னடைவை அடையலாம் என்று கூறப்படுகின்றது.








