457 தொண்டராசிரியர்கள் புதிதாக நியமனம்

0
573 views

வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 457 தொண்டராசிரியர்களில் 142பேர் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண தொண்டராசிரியர்களிகான நிரந்நர நியமனம் கடந்த 2018-07-22 அன்று யாழ் இந்துக் கல்லூரியல் வைத்து பிரதமரால் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட 457 பேரில் 142பேர் கிளிநொச்சி கல்வி வலயத்தினையும் , 59 பேர் முல்லைத்தீவு வலயத்தினையும், 49 பேர் வவுனியா தெற்கு வலயத்திலும் நியமனம் பெற்றுள்ளனர். இதேபோன்று தீவகத்தைச் சேர்ந்த 40பேரும் , வலிகாமத்தைச் சேர்ந்த 39 பேரும் நியமனம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று வடமராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 34பேரும் , யாழ்ப்பாணம் கல்வி வலயத்தைச் சேர்ந்த 29 பேரும் , வவுனியா வடக்கைச் சேர்ந்த 16 பேரும் ,மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 14 பேரிற்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு தென்மராட்சி கல்வி வலயத்தில் 10 பேரிற்கும் மடுக் கல்வி வலயத்தில் 4 பேரிற்குமாகவே மொத்தம் 457 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள அதே நேரம் கடந்த 2018-03-28 அன்றும் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here