யாழின் கில்லாடி சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தை தனதாக்கியது வல்வை அணி

0
919 views

புலோலி இளைஞர் விளையாட்டுக்கழக மென்பந்தாட்ட (யாழின் கில்லாடி) சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தை தனதாக்கியது வல்வை அணி.
புலோலி இளைஞர் விளையாட்டுக் கழகமானது யாழ்மாவட்ட ரீதியில் அணிக்கு 11பேர் 10   over கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தி வந்தது.
அவ்வகையில் வல்வை அணியானது தனது முதல் போட்டியில் மல்லாகம் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை 20 ஒட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் வதிரி சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தை 58 ஓட்டங்களாலும் , மூன்றாவது போட்டியில் இமைஞானன் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை 35 ஓட்டங்களாலும் வெற்றி பெற்று லீக் சுற்றுக்குள் நுழைந்தது.
லீக் சுற்றின் முதல் போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தை 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஞானம்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த போதிலும் நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் பிளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்தது.
பிளே ஓவ் சுற்றின் அரையிறுதி தகுதிகாண் சுற்றில் ஸ்பேஸ் அணியுடன் மோதியது. அந்தப்போட்டியில் 3விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி qulifier 2 இற்கு தகுதிபெற்றது. இந்தப்போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் 1விக்கெட்டினால் போராடி தோல்வியடைந்து மூன்றாம் இடத்தை தனதாக்கியது….
இச்சுற்றுத்தொடரின் நாயகனாக வல்வை அணித்தலைவர் கபிலன் தெரிவு செய்யப்பட்டார்.


வாழ்த்துக்கள் வீரர்களே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இறுதியாட்டங்களிற்கு தகுதி பெறலாம்…
பிளே ஓவ் சுற்றுக்கான score விபரம் வருமாறு

eliminator round
valvai vs space

valvai bowling
Roshan :- 4 wickets
Pradeep:- 2wickets
Thirukkumaran:- 1 wickets
ulakarasa :- 1wickets

Space 76 /10

valvai batting
kabilan:- 34(4 six)
piragathees:- 24(3six)
thirukkumaran :- 12( 1 six , 1four)

valvai 79/7

valvai won by 3wickets

qulifier 2
valvai vs colins

valvai batting
pradeep:- 17(1six)
pragalathan:- 11( 1four)
kabilan :- 08( 1 six)

valvai bowling
pradeep:- 1wickets
roshan:- 1wickets
kabilan:- 1wickets
thirukkumaran :- 1wickets

colins:- 59/9

colins won by 1 wickets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here