புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது மன்னார் மாவட்ட ஆடவர் அணி

0
667 views

மாகாண மட்ட ஆண்களுக்கான 4×100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது மன்னார் மாவட்ட ஆடவர் அணியினர்.


வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 12 ஆவது விளையாட்டு விழாவின் தடகளப்போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆண்களுக்கிடையிலான 4×100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் பங்கு பற்றிய மன்னார் மாவட்ட அணி முன்னைய சாதனையான 44.1 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்து 43.7 செக்கன்களில் ஓடி புதிய சாதனையை ஏற்படுத்தி தங்கபதக்கத்தைப் பெற்றுக் கொண்டது, முல்லைத்தீவு மாவட்ட அணி 46.3 செக்கன்களில் ஓடி வெள்ளிப்பக்கத்தையும், கிளிநொச்சி மாவட்ட அணி 46.7 செக்கன்களில் ஓடி வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here