மரண அறிவித்தல் திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்

0
974 views

மரண அறிவித்தல்

திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு நாவலவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம் அவர்கள் வியாழக்கிழமை 28.12.2017 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் சிவகாமிபிள்ளை அவர்களின் அன்பு புதல்வியும்.காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(ஒய்வு பெற்ற உப அதிபர் யாழ் St.John’s College) அவர்களின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்ற சாம்பசிவம் ஆத்தாட்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்.சுகுமார், நந்தகுமார், சாந்தகுமார், காலஞ்சென்ற சாந்தினி, திருக்குமார் ஆகியோரின் அன்புத் தாயும்.

காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற நடேசன்(சட்டத்தரணி), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, முருகமூர்த்தி, Dr.மயிலேறும் பெருமாள், தவமணிதேவி ஆகியோரின் சகோதரியும்.காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், காலஞ்சென்ற ராசகோபால், காலஞ்சென்ற சேவற்கோடியோன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் உடல் பார்வைக்காக 30.12.2017 சனிக்கிழமை அன்று Kalubowila Jayaratne மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் வைக்கப்பட்டு அன்னாரின் ஈமக்  கிரியைகள் அன்று மாலை 5.00 மணியளவில் Kohuwala மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here