காஸாவின் எதிர்காலம்??

0
325 views

2.2 மில்லியன் மக்கள் வசிக்கும் காஸாபகுதி 41 கிமீ (25 மைல்கள்) நீளமும் 10 கிமீ அகலமும் கொண்டது, இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா, 1967 மத்தியகிழக்குப் போரின் போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது. 2005 இல் இஸ்ரேல் தனது படைகளையும் சுமார் 7,000 குடியேறிகளையும் திரும்பப் பெற்றது.

2007 ல் வன்முறை பிளவுக்குப் பிறகு, அப்போதைய ஆளும் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு (PA) விசுவாசமான படைகளை வெளியேற்றி, போராளி இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றது.

அப்போதிருந்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகியவை தங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக முற்றுகை தேவை என்று கூறி, காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளால் பயங்கரவாதக் குழுவாக ஹமாஸ் போராளிக்குழு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

காஸாவில் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலுடன் பல போர்களை ஹமாஸ் போராளிக்குழு நடத்தி வருகின்றது.

அக்டோபர் 7 ஆம் தேதி, நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது எதிர்பாராத  தாக்குதலைத் தொடங்கினர், குறைந்தது 1,300 பேரைக் கொன்றனர் மற்றும் டஜன் கணக்கான பணயக்கைதிகளை காசாவுக்குத் திருப்பி அழைத்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது, இதில் 3,000 க்கும் மேற்பட்டபாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இஸ்ரேலின் துருப்புக்கள் தரைவழி நடவடிக்கைக்காக குவிக்கப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டஇராணுவ தாக்குதலை இஸ்ரேல் முடித்து வைக்கும் என பிரதமர் நற்றன்யாகு அவர்கள் சூளுரைத்திருக்கிறார்.

ஹமாஸ் போராளிகளால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல் பாலஸ்தினீயமக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்குமா அல்லது பாலஸ்தின மக்களின் கடைசி நிலப்பரப்பின் ஆளுமையையும் இழக்குமா என்பதை உலக மக்கள் உன்னிப்போடு கவனிக்கிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here