
ஆயிரம் பிறைகள் கண்ட புண்ணியம்
அகவை நூற்றி ஒன்று கண்ட பாக்கியம்
——————————-
ஆருயிராய் இந்தப் பெருவெளியில்
ஆயிரம் பிறைகள் கண்டு
அகவை நூற்றி ஒன்றும் கண்டு
கொள்ளுப்பேரன் பேத்தியும் கண்டு
சைவ மொழிவழி அரிது காண்
சதாபிஷேக கனகாபிஷேக பெருவிழா நிறைநல் பொருள் கண்டு
சென்ற தாயே…!
வலியிழந்து நின்றிலை நீ அம்மா
குருதி சோர வீழ்ந்திலை நீ அம்மா
வாழ்வில் பல மைல்களைக் கடந்து வந்தவள் நீ அம்மா
இழைந்தோடும் எளிமையுடன்
வாழ்ந்த மனிதம் நீ அம்மா!
மும்மதலை மடிசுமந்து
ஐயிரண்டு பேத்தியுமாய்
பதின்மூவர்க்கு பூட்டியுமாய் நின்
எழில் விதையூன்றி உயிர்துப் பருத்த ஆலமரம் நிழல் மரித்து மறைந்ததுவோ…!
அலையாய் வந்து செல்லும்
நினைவுகள் உயிர்த்திருக்க
யாக்கை தந்த முதிர்வுநிலையோடு
காலங்களை சுருட்டிக் கடப்பதில்
உடல் ஒத்துழைக்காவிட்டாலும் பிள்ளைகள் பேரமக்கள் பூட்டியார் தரும் மன தைரியத்தால் இயங்கிக் கொண்டிருந்த இதயம்
ஆத்மா அடங்கி ஆன்மாவுடன்
பயணித்துவிட்டதோ!
தளர் நடை போடும் முற்றிய வயதிலும்
தான் இள மயில் என பறைசாற்றி
நிற்பாயே -நின்
அருமையும் பெருமையும் அறியாத
ஒற்றனாய் வந்த காலனின்
சூழ்ச்சியால் வீழ்ந்தனையே..!
எங்கனம் யாம் உரைப்போம்
உனை அணைத்து நின்ற உன் உயிரான உறவுகளிற்கு…!
நூறண்டுகள் மேல் நான் வாழ்வேன் என்ற லட்சியக்கனவு
பலித்து மனம் நிறைத்து சென்றாயம்மா
மனம் ஒரு கணம் விம்மத்தான் செய்கிறது ஆனாலும் நீ
சென்றுவா அன்னையே சென்றுவா!
மூச்சு நிற்கும் முன்
முன் மொழிந்த முயற்ச்சி
சாம்பலாய் போகும்
தேகம் தனை தானம் செய்து
மரணத்தின் பின்னும்
சரித்திரம் படைத்திட்ட யாக்கை
இறந்தாலும் நின் கருணை
இன்னொரு உயிரோடு
உயிரானா ஜீவன்
உடல் உறுப்பை தானம் செய்து
உன்னத மனிதச் செயலாய்
அரும்பணி செய்திட
மருத்துவம் கற்றபவர்
கற்றுணை மேம்பட நின்
யாக்கைதனைஈந்து
உத்வேகம் தந்து
சரித்திரம் படைத்திட்ட
பரிந்துயிரானவர்
நூறாண்டுகள் வாழந்த தவமுனிவர்களின் வரலாறு போன்று உனது நாமமும் நிலைத்து திற்கும் அம்மா சென்று வா..!
உங்கள் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்








