யாழிலுள்ள பிரபல திரையரங்கு மூடப்பட்டுள்ளது

0
715 views

யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று நண்பகல் சுகாதாரத்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று நிலை ஆரம்பித்த காலத்தில் திரையரங்குகளுக்கு திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இருக்கைகளின் எண்ணிக்கையில் 50% பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமையை அடுத்து இன்று குறித்த திரையரங்கில் இருக்கைகள் முழுவதற்கும் நிர்வாகம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கியுள்ளது. இச்செய்தி சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தமையைத் தொடர்ந்து திரையரங்கு மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here