வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இருந்து மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட போத்தல் உள்ளிட்ட கழிவுகளை நண்பர்களுடன் இணைந்து அகற்றிய மாணவன், சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








