பின்னணிப் பாடகர் திரு S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டிருந்த வேளை உடல் நலக்குறைவால் இன்று இறைபதமடைந்துள்ளார்.
45000 இற்கும் அதிகமான பாடல்களை பாடி இசையையே தன் வசப்படுத்தி உலகெங்கும் பாடல்களால் வலம் வந்த ஒரு பாடகர்.
S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் 6 தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகளை தன் இசை ஆளுமையால் பெற்றிருந்தார். இசைத்துறையில் அவரது இழப்பு , அவரது இடம் யாராலும் ஈடு செய்ய முடியாதது.
இவ்வுலகைவிட்டு பிரிந்தாலும் ஒவ்வொருவரின் வாழ்வினும் மனதிலும் இசையால் குடியமர்ந்த இசைஞானி இறைவனடி சேர்ந்துவிட்டார். ஆனாலும் என்றும் இசையின் மூச்சில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.









