வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள விளையாட்டுக் கழகங்களின் வீரர்களுக்கு கொரோனா இடர்உதவி நிவாரணம் வழங்கப்பட்டது.
தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை கால்ப்பந்தாட்டச் சம்மேளனம் வமாராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் விளையாட்டு வீரர்களுக்கு நிவாரணம் வழங்வென குறிப்பிட்ட தொகை பணத்தை ஒதுக்கி இருந்தது.
இதில் அச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற 18 கழகங்களில் தலா பத்து வீரர்ளுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. குறித்த கழகங்கள் மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு நேற்று உதவிப் பொருட்ள் வழங்கப்பட்டன.
வலயம் ஒன்றில் கால்ப்பந்தாட்ச் சங்க உறுப்பினர் பா.முகுந்தன் தலைமையில் வதிரி பொம்மர்ஸ் மைதானத்திலும், வலயம் இரண்டில் சங்கத்தலைவர் ரா.வரதராசன் தலைமையில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் பொது மண்டபத்திலும், வலயம் மூன்றில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சி.வசந்தகுமார் தலைமையிலும் பொருட்கள் வழங்கப்பட்டன.










