வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் வலைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் குறித்த ஆட்டம் சனிக்கிழமை மாலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் றெயின்போ வி.கழகமும் உதயசூரியன் வி.கழகமும் மோதியன. இரு அணிகளும் 5:5 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் முடிவுற்றது.
அடுத்து நேதாஜி வி.கழகமும் றெயின்போ வி.கழகமும் மோதின . நேதாஜி வி.கழகம் 8:6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேதாஜி எதிர் உதயசூரியன் வி.கழகம் மோதியது. உதயசூரியன் வி.கழகம் 7:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் இடத்தினை பிடித்த உதயசூரியன் அணியும் இரண்டாம் இடத்தினை பிடித்த நேதாஜி அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.










