டொரோண்டோ ஸ்ரீ முத்துமாரியம்மன் பூங்காவன திருவிழா ஓர் வரலாற்று சாதனை மூவாயிரத்திற்கு மேலாக பக்தர்கள்

0
1,911 views

டொரோண்டோ ஸ்ரீ முத்துமாரியம்மன் பூங்காவன திருவிழா
ஓர் வரலாற்று சாதனை மூவாயிரத்திற்கு மேலாக பக்தர்கள்

கனடா டொரோண்டோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூங்காவன திருவிழா
Albion/ HW 27 சந்தியில் அமைந்துள்ள கனடா டொரோண்டோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூங்காவனத்திருவிழா கனடாவின் ஓர் வரலாற்று சாதனை
பிந்திய கணிப்பீட்டின் தகவல்களின் அடைப்படையில் மூவாயிரத்திற்கு மேலாக பக்தர்கள் பங்குபற்றியதாக தமிழ் பிசி அறிவிப்பு
பன்னிரண்டு நாதஸ்வர பன்னிரண்டு தவில் வித்துவான்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இசை வேள்வி

ஆலயமெங்கும் பச்சை பசுமையாக வேப்பமிலைகள் கொண்டு அலங்காரம்
அழகிய வனப்பகுதியில் அமைந்த பந்தலில் அமைக்கப்பட்ட்ட ஊஞ்சலில் முத்துமாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு
தனித்தனி கறிகளுடன் சிறப்பான அன்னதானம் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாம்பழங்கள் வழங்கி மற்றுமொரு சாதனை
நாதஸ்வர தவில் வித்துவான்கள் மிகவும் சிறப்பாக அசத்தலாக மண்டபம் அதிர நாதஸ்வர ஓசையில் வழங்கிய பாடல்கள் எல்லோரையும் இன்பம் கலந்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது .

தில்லானா மோகனாம்பாள் பாடல் நாதஸ்வர தவில் வித்துவான்கள் மிகவும் சிறப்பாக அசத்தலாக மண்டபம் அதிர நாதஸ்வர ஓசையில் வழங்கிய பாடல்கள் எல்லோரையும் இன்பம் கலந்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது தில்லானா பாடலினை சகல கலைஞர்களும் ஒன்று சேர்ந்து வாசித்தபோது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை. இந்த பாடலினை நாதஸ்வர ஓசையில் செவிமடுத்தபோது இசையால் உலகத்தை ஆண்டு எங்களையெல்லாம் விட்டு மறைந்த சீர்காழி கோவிந்தராஜனை நினைவுகூர வைத்தது .

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற சௌந்தரராஜன் பாடிய அருமையான பாடலினை நாதஸ்வர தவில் இணைந்த ஓசையில் செவிமடுத்தபோது மனதை குளிர வைத்தது.
இவ்வாறாக ஏராளமான பாடல்கள் இன்பம் கலந்த மகிழ்ச்சிக்கு வழிசமைத்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here