மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் 15.02.2019 இரவு
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பு மாணவரான ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளி யில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் தேடிய போதே குறித்த மாணவன் மணல் காடு பகு தியில் தூங்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








