இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினால் பாடசாலை மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் நேற்று தொண்டைமனாறு வீ.கத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கான டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் செய்முறை விளக்கமும் வழங்கப்பட்டன.



வித்தியாலய அதிபர் இரா ஸ்ரீ.நடராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்மாவட்ட இலங்கைச்செஞ்சிலுவைச்சங்கத்தின் உப தலைவர் ரி.ரவிச்சந்திரன், டெங்கு நோய் கட்டுப்பகுதி இணைப்பாளர் சந்தோஷ், தொண்டைமனாறு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சதானந்தன் மற்றும் தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துரைகளையும் பயிற்சிகளையும் வழங்கியதோடு பாடசாலைக்கென கழிவகற்றும் உபகரணங்களையும் வழங்கினர்.









