தமிழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிப்பு

0
553 views

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் அசாதாரண நிலை நிலவுகின்றது.

இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள், 3 படகுகள், 2 இயந்திரம் மற்றும் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் எனக் கோரி உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 12 ஆம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் வருகை தந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள். படகுகள், இயந்திரங்கள், வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here