கம்பிகளின் மொழி பிறேமின் மறந்திடுமோ மனதைவிட்டு என்ற கவிதை நூல் அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் சிர்மலநாதனால் வெளியிட்டு வைக்கபட்டது.
வல்வெட்டித்துறை மானாங்கனை ஒன்றியத்தின் அனுசரனையுடன் முத்தையன;கட்டு வலது கரை மகாவித்தியாலய அதிபர் தலைமையில் வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நhடாளுமன்ற உறுப்பினர் நூலை வெளியிட்டு வைக்க முதற்பpரதியை திருமதி சிறிதரன் ஜெயமாலா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஆசியுரையினை சமரபாகு சீனா உதயகுமாரும் நூலின் அறிமுகவுரையை செல்லமுத்து வெளியீட்டகத்தின் உரிமையாளர் யோ.புரட்சியும் மதிப்பீட்டுரையை பொலிகை சிந்துதாஸனும் வாழ்த்துரையை வடமாகாண சபை உறுப்பனர் வே.சிவயோககும் ஏற்புரையை நூலாசிரியர் கம்பிகள் மொழி பிறேமும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம் சு.சுகிர்தன் க.தர்மலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.












