பொதுத் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் எட்டாம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், தேர்தல் நடாத்துவதற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சுகாதார அறிவுறுத்தல்கள் தொடர்பில் மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை, தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.