அபாரவெற்றியுடன் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை விளையாட்டுக் கழக மகளிர் அணி…
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினம் இடம்பெற்றது. அந்தவகையில் அரையிறுதி ஆட்டத்தில் நக்கீரன் அணியினை எதிர்கொண்ட வல்வை அணியானது 25:00,25:06 என்ற செற்கணக்கில் அபார வெற்றியினை பெற்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை தீபஜோதி அணியினை எதிர் கொண்ட வல்வை பெண்கள் அணியானது அந்த போட்டியிலும் எவ்வித சிரமமும் இன்றி 25:06,25:08 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது….
சம்பியனாகிய வல்வை பெண்கள் அணியினருக்கும் அவர்களுக்கு பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்