வல்வையைச் சேர்ந்த அருளானந்தசாமி செல்வமனோகரன் வயது (41) கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக கராத்தே பயின்று, கருப்புப் பட்டியை (Black Belt) கடந்த மூன்று மாதங்களுக்கு பெற்றுள்ளார்.
தான் மட்டும் இந்தக் கலையைப் பயிலாமல் தன்னுடன் சேர்த்து தனது இரண்டு குழந்தைகளான பிரணவன் (வயது 12), இஷா (வயது 10) ஆகிய இருவருக்கும் இந்த தற்காப்புக் கலையை முறையே கற்றுக் கொடுத்து வருவது தான் இவர் கராத்தே மீது கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகின்றது.
லண்டனில் நடைபெற்ற பல போட்டிகளில் மூவருமாக சேர்ந்து வாங்கிய நிறைய வெற்றிக் கிண்ணங்களும், மெடல்களுமாக வீடு முழுக்க நிரம்பியுள்ளதை பார்க்க பெருமையாக இருக்கின்றது.
ஆசான் கணேசலிங்கம் அவர்களின் மூலம் லண்டனில் இயங்கி வரும் BASK (British Academy of Shotokan Karate) என்னும் கராத்தே பள்ளியில் இவர்களுடன் மேலும் பல வல்வையர்கள் கராத்தே கலையைக் கற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செல்வன்.பிரணவன் South Wimbledon, Rutlish School, இலும்
செல்வி.இஷா Mitcham, Lonesome Primary School கல்வி கற்று வருகின்றனர்.