உலக கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானை போராடி வென்றது இலங்கை..

0
262 views


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பலம்வாய்ந்த இலங்கை அணி போராடி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் டுனெடினில் இன்ற நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 1996–ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி, அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில்105 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது. மேத்யூஸ் தலைமையிலான வலுவான இலங்கை அணியின் ஆட்டத்துக்கு, ஆப்கானிஸ்தான் அணி ஈடுகொடுப்பது கடினம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது.

இலங்கை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்து விளையாடிய முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஓவர்கள் விளையாட முயற்சி செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 233 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் அஷ்கார் அதிகப்பட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்து விளையாடியது. திரிமான்னா, தில்சன் ஆகியோர் முதல் பந்திலே டக் அவுட் ஆனார்கள். அறிமுக அணியான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு பந்துகளிலே இரண்டு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தது. தவ்லத் ஜட்ரன், ஷாபூர் ஜட்ரன், ஹமித் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். சங்கரகராவும் 7 ரன்களில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு இலங்கை அணியை சற்று எச்சரிக்கும் விதமாகவே காணப்பட்டது. ஆனால் அனுபவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள், ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு எடுபடவில்லை. இருப்பினும் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் நெருக்கடி கொடுத்தது.

இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. இலங்கை அணியில் ஜெயவர்த்தனே சதம் அடித்து அணியை சரிவு பாதையில் இருந்து மீட்டார். மேத்யூஸ் 44 ரன்களில் அவுட் ஆனார். இலைங்கை அணி 48.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக மென்டிஸ் 9 ரன்களுடனும், பெரெரா 49 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ஹமித் ஹசன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here