உலககோப்பை தொடரின் லீக் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது அயர்லாந்து அணி. சிம்மன்ஸ் சதம் வீணானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நெல்சனில் நடந்த லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து கேப்டன் போர்டர்பீல்டு, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சுமார் துவக்கம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல், டுவைன் ஸ்மித் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கெவின் ஓ பிரையன் வீசிய போட்டியின் 8வது ஓவரில் ஸ்மித் (18), டேரன் பிராவோ ‘டக்’.என, இரண்டு அதிர்ச்சி கிடைத்தது. மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், 65 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். சாமுவேல் (21), ராம்தின் (1) விரைவில் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின் டேரன் சமி, சிம்மன்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். இவர்களது நிதான ஆட்டத்தால் 35 ஓவரில் 137ஃ5 ரன்கள் தான் எடுத்தது. இதன் பின் அப்படியே அதிரடிக்கு மாறினர். ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது ஒரு பவுண்டரி என, விளாசினர். கெவின் ஓ பிரையனின் 8வது ஓவரில் தலா 2 சிக்சர்இ 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார் சிம்மன்ஸ். 6வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்த போது, 9வது அரைசதம் அடித்த டேரன் சமி (89 ரன், 67 பந்து) அவுட்டானார். மறுமுனையில் அசத்தலை தொடர்ந்த சிம்மன்ஸ், ஒருநாள் அரங்கில் 2வது சதம் அடித்தார். இவர், 102 ரன்னுக்கு (84 பந்து) அவுட்டானர். கடைசி 15 ஓவரில் 167 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. ரசல் (27) அவுட்டாகாமல் இருந்தார்.
அயர்லாந்து அணிக்கு போர்டர்பீல்டு (23) ஏமாற்றினார். அடுத்து இணைந்த ஸ்டெர்லிங், ஜாய்ஸ் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது ஸ்டெர்லிங் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்பினார். பின் வந்த நெயில் ஓ.பிரையன் கைகொடுக்க
வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறிய, இளம் கேப்டன் ஜேசன் ஹோல்டர், செய்வதறியாது விழித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங்கும் மோசமாக அமைய, அயர்லாந்து 39 ஓவரில் 269ஃ2 ரன்கள் குவித்தது. இதனிடையே, அரைசதம் கடந்த ஜாய்ஸ் (84), பால்பிர்னே (9), வில்சன் (1), கெவின் ஓ பிரையன் (0) என, அடுத்தடுத்து கிளம்ப லேசான பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும்இ அரைசதம் அடித்த நெயில் ஓ பிரையன்,.தொடர்ந்து இரு.பவுண்டரி விளாச, வெற்றி நம்பிக்கை நீடித்தது.. கடைசியில் மூனே ஒரு பவுண்டரி அடிக்க அயர்லாந்து அணி 45.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 1975, 1979 என, இரு முறை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ், பரிதாபமாக வீழ்ந்தது. ஆட்ட நாயகனாக ஸ்டெர்லிங் தெரிவானார்.