நடிகை பூஜா திருமணத்துக்கு தயாராகிறார். டீசம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) நிச்சயார்த்தம் நடக்கவுள்ளது. மாப்பிள்ளை பெயர் தீபக் சண்முகநாதன். இவர் இலங்கையில் உள்ள ஈழத்தை சேர்ந்தவர். மாடலிங் மற்றும் பே~ன் டிசைனராக இருக்கிறார். இது காதல் திருமணமாகும். பூஜா, ஜெ.ஜெ. படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள் படத்தில் பூஜா கேரக்டர் பேசப்பட்டார்.