மில்லர், டுமினி சதம் தென் ஆப்ரிக்கா எளிய வெற்றி..

0
529 views

டேவிட் மில்லர், டுமினி சதம் விளாசஇ ஜிம்பாப்வேக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணி, .ஜிம்பாப்வே அணியை சந்திக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். ஜிம்பாப்வே பவுலர்களை சமாளிக்க முடியாமல், துவக்க வீரர்கள் குயின்டன் டி காக், ஆம்லா ரன்கள் சேர்க்கத் திணறினர் . இந்த நெருக்கடியில் குயின்டன் டி காக் (7) முதலில் கிளம்பினார்..அடுத்த சில நிமிடத்தில் பயங்கராவின் வேகத்தில் ஆம்லா (11) போல்டானார். டுபிளசி.(24) நீடிக்கவில்லை..கேப்டன் டிவிலியர்ஸ் (25), எர்வினின் அசத்தலான ‘கேட்ச்சில்’ திரும்பினர்.
‘சூப்பர்’ ஜோடி:
பின் இணைந்த மில்லர், .டுமினி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மில்லர், போகப் போக அதிரடிக்கு மாறினார். மியர் வீசிய போட்டியின் 48வது ஓவரில், 3 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மில்லர், 30 ரன்கள் எடுக்க, உலக கோப்பை தொடரின் அறிமுக போட்டியில், 81வது பந்தில் சதம் கடந்து அசத்தினார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த டுமினி, தன் பங்கிற்கு சதம் விளாசினார். இந்த.ஜோடியை பிரிக்க சிகும்புரா எடுத்த எந்த முயற்சியும் கடைசி வரை பலிக்கவே இல்லை. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் .விக்கெட்டுக்கு 339 ரன்கள் குவித்தது. சதம்.அடித்த மில்லர் (138 ரன், 92 பந்து), டுமினி (115 ரன், 100 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
மசகட்சா ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் (5) சோபிக்கவில்லை. பின் இணைந்த சிபாபா, மசகட்சா ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அரைசதம் கடந்த சிபாபா (64), .மசகட்சா (80) அவுட்டான பின் பிரண்டன் டெய்லர் (40), வில்லியம்ஸ் (8), எர்வின் (13) என, ஒருவரும் நிலைக்கவில்லை. பின் வரிசையில் மையர் மட்டும் 27 ரன்கள் எடுக்கஇ ஜிம்பாப்வே அணி 48.2 ஓவரில் 277 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மில்லர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here