மெல்போர்னில் இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9- விக்கெட் இழப்புக்கு 342 ரன்களை குவித்தது. ஆஸி. அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 135 ரன்களும்இ மேக்ஸ்வெல் (66)இ பெய்லி 55 ரன்களையும் குவித்தனர்.
அடுத்து 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகட்சமாக டெய்லர் 98 ரன்களும்இ வோக்ஸ் 37 ரன்களையும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப
ரன்களில் அவுட்டாகினர். இதனால், 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்.இழந்து 231 ரன்களில் தோல்வியை தழுவியது
இங்கிலாந்து அணி. கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இங்கிலாந்து.வீரர் ஃபின் அசத்தியிருந்தார். மொத்தம் 71 ரன்கள்
கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் மார்ஷ் 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டநாயகனாக பிஞ்ச் தெரிவானார்.
செய்தித்;தொகுப்பு – வல்வை மதன்