கலாபூசனம், கலைச்சுடர், கலைப்பரிதி, சிலம்புச்செல்வன் தில்லை சிவலிங்கம் (தில்லையம்பலம் தவராசா) இன்று(29.11.2018 வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்துள்ளார்.
பொலிகையின் அதி உன்னத ஆளுமை சிலம்பு ஆசான், கூத்து பாடகர், மறவர் கலாமன்ற ஆரம்ப கர்த்தா ,உடுக்கு கலை வித்தகர். வல்வை முத்துமாரியம்மன் திருவிழாக்காலங்களில் கிராமிய உடுக்கு பாடல்களும், கரகாட்டங்களின் போதும் இவரின் ஓங்கி ஒலித்த குரலுக்கு நிகர் இவரே. அந்த குரல் இன்றோடு நிறுத்திக்கொண்டுள்ளது.அன்னார் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களின் அண்ணனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.சாந்தி !சாந்தி!! சாந்தி!!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.சாந்தி !சாந்தி!! சாந்தி!!