பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் பந்து வீச விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

0
153 views

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் பந்து வீச விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் பந்து வீச
விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று நீக்கியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்.சயீத் அஜ்மல் (34) இவர் பந்து வீசும் போது முழங்கை.அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு அதிகமாக வளைவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம்.அவரது பந்து வீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட்.கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது.இதையடுத்து பந்துவீச்சை சரிசெய்யும் முயற்சியில் சயீத் அஜ்மல் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற
பந்து வீச்சு பரிசோதனையில் சயீத் அஜ்மல் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆய்வு மையத்தில் நடைபெற்ற மறுபரிசோதனையின் போது சயீத் அஜ்மல் பங்கேற்று தனது பந்து வீச்சை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

இதில் அவரது பந்து வீச்சு முறை சரி என்று நிருபீக்கப்பட்டது. இதன் மூலம் சயீத் அஜ்மல்.உடனடியாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோல், வங்காளதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து விச்சாளர் சேகாக் காசி பந்து வீச்சும் விதிமுறைகளுக்குட்பட்டு இருப்பதால் அவருக்கும்
விதிக்கப்பட்ட தடையையும் ஐசிசி நீக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here