வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனின் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 2018.04.29 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்று அம்மனுக்காக வல்வை மக்களால் கொண்டாடப்படும் இந்திரவிழாவானது இவ்வருடமும் வல்வையரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 51 வருடங்களாக தரணியெங்கும் வல்வையின் புகழைக் கூறும் ஈழத்தின் ஓர் தனித்துவம் நம் இந்திரவிழா.
வீதியெங்கும் மின்விளக்கு அலங்காரங்கள், சமநேரப்பொழுதில் 11 மேடைகளில் இசைநிகழ்ச்சிகள், வானுயரப் பறக்கும் புகைக்கூண்டுகள் ,விதவிதமான வானவேடிக்கைகள் ,கதைகள் பலபேசி அழகழகாய் அமைந்த ஓவியங்கள், சிலைகள் ,சிற்பங்கள் ,வல்வை இளைஞர்களின் கலைகளை வெளிக்கொணரும் கட்டவுட்டுக்கள் ,தாகசாந்தி நிலையங்கள் ,பொம்மலாட்டங்கள் என வல்வை மாநகரையே இந்திரலோகத்து சமமாக மாற்றும் . பார்க்க வருகின்ற மக்களையோ எண்ண முடியாது.
நெடியகாடு இளைஞர்கால் 101 அடி,50 அடி புகைக்கூண்டுகள் விடப்பட்டது சாதனையாகும்.