வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் பிளே ஓவ் ஆட்டங்கள் நேற்று தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
அவ்வகையில் இளங்கதிர் அணியானது சைனிங்ஸ் அணியுடன் மோதியது. இதில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக தகுதிபெறும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இடம்பெற்றது.ஆட்ட நேர முடிவில் இளங்கதிர் அணியானது 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது.
மற்றுமொரு பிளே ஓவ் ஆட்டத்தில் உதயசூரியன் அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரேவடி அணியானது அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது..
இவ்வெற்றியின் மூலம் வருத்தப்படாத வாலிபர் சங்க தொடரில் நான்காவது ஆண்டாகவும் இறுதியாட்டத்திற்கு இளங்கதிர் அணியானது தகுதி பெற்றது.