வல்வை முத்துமாரி அம்மன் 9ஆம் திருவிழாவிற்காக தொடர்ச்சியாக 40 வருட சேவை ஆற்றியதை முன்னிட்டு கலாபூசணம் ஏ.மு. பஞ்சமூர்த்தி அவர்கள் 9ஆம் திருவிழா உபயகாரர்களும் மற்றும் அவர்கள் சார்பாக ஐய்யப்பா அவர்களாலும் பொன்னாடை போர்த்தி, தங்கச்சங்கிலி அணிவிக்கப்பட்டு, பட்டம் சூட்டி வல்வை முத்துமாரி அம்மன் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்.
வித்துவான்களுக்கு போர்த்தப்பட்ட பட்டுக்கள் அனைத்தும் 90களில் வல்வை மக்கள் அறிந்த திருச்சி கோழி கடை (நெசவாலையில்) இருந்து தருவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து
வல்வை ஸ்ரீ முத்துமாரி தேவி மகோற்சவம் காணுமே பாம்பு திருவிழா
ஒன்பதாம் திருவிழா காண்பதோ….மகுடி பாம்பாட
மகுடி வாசித்ததோ கோண்டாவிலூர் மாமேதை ஏ.மு.பஞ்சமூர்த்தி
மாரியும் மக்களும் மகிழ்வதோ மகுடியில் நாலு தசாப்தம்
மகுடி மாமன்னன் பட்டம் பெறுவதோ ஐந்தாம் தசாப்தம்
மகுடி மாமன்னன் பட்டம் சூட்டுவதோ ஒன்பதாம் திருவிழா உபயகாரர்
பொன்னாடையுடன் பட்டம் சூடடுவதோ வல்வையூர் ஐயப்பா
வல்வை நகரும் கண்டு வாழ்த்தி நின்று போற்றுதம்மா…