சிவநாதன் நிமலன் ( குட்டி) ஞாபகார்த்த உதைபந்து சம்பியனாகியது நேதாஜி அணி

0
794 views

சிவநாதன் நிமலன் (குட்டி) ஞாபகார்த்தமாக ரேவடி விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரை நடாத்தி வந்தது.அந்த வகையில் இன்று (15/04/2018) இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகமானது மோதியது….மிகவும் விறுவிறுப்பான இப்போட்டியில் முதல்பாதியாட்டத்தில் நேதாஜி அணியானது 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது..
இரண்டாம் பாதியாட்டத்தில் ரேவடி அணியானது மிக வேகமாக விளையாடியது.. அதற்கேற்ப ஆட்டம் முடிய ஒரு சில நிமிடங்களே உள்ள் நிலையில் கிடைத்த தண்ட உதை வாய்ப்பை கோலாக மாற்ற தவறியமையால் போட்டியை நேதாஜி அணியானது 2-1 என்ற கோல்
கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தனர் ..
இச்சுற்றுத்தொடரின் தொடர் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த சீலனும் இசிறந்த பின்கள வீரராக அதே அணியைச்சேர்ந்த ராஜ் , சிறந்த கோல்காப்பாளராக நேதாஜி அணியைச்சேர்ந்த அஜந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.. அத்துடன் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக நேதாஜி அணியின் கோபி தெரிவு செய்யப்பட்டார்…


இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற நேதாஜி விளையாட்டுக்கழகத்திருக்கு எமது வாழ்த்துக்கள்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here