மக்கள் மன்றத்தினரால் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

0
766 views

இன்றைய நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளதைச் சாதகமாகப் பயன் படுத்திய் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குக் குந்தகம் விளைவித்த தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து பதவிக்காகத் தமிழர் களின் தனித்துவத்தை விட்டு உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிகளைக் கைப்பற்றியுள்ள தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் கூட்டுக் கட்சிகள் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து புலம் பெயர்ந்த மக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்திச் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் கொண்ட மனு ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப் பட்டது.இச் சந்திப்பில் அரசியலில் ஈடுபடாத பொது அமைப்பாகச் செயற்படும் மக்கள் மன்றத்தின் சார்பில் கல்வி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும்,வல்வெட்டித்துறை முன்னாள் நகர பிதாவுமான திரு.ந.அனந்தராஜ் மற்றும் இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த திரு.ம.இராமானந்த், திரு.இ.பிரேம் நாத் ஆகியோருடன் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் திரு.இ.சுரேன் மற்றும் திரு.சி.ஜெகப்பிரதாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கடந்த 05.04.2018 அன்று இடம்பெற்ற முதலமைச்சருடனான சந்திப்பில் மக்கள் மன்றத்தின் சார்பில் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட மனு பின்வருமாறு:

 

மக்கள் மன்றம் ,
தெணியம்பை,
வல்வெட்டித்துறை.

திகதி: 05.04.2018
கௌரவ நீதியரசர். சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு,
முதலமைச்சர்,

வடக்கு மாகாணம்.

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு,

தமிழர் கட்சிகளிடையேயான ஒற்றுமையில் வடமாகாண முதலமைச்சரின் வகிபாகம்

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்ட பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அடிப்படைக் கொள்கைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுடனும், இதுவரை காலமும் ஒட்டுக் குழு என்றும், துரோகிகள் என்றும், கொலைகாரர்கள் என்றும் வசை பாடித்திரிந்த ஈபிடிபியினருடனும் கூட்டுச் சேர்ந்து தாங்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் மட்டுமல்லாது, தோல்வி அடைந்த உள்ளுராட்சிச் சபைகளிலும் தமது ஆட்சியை அமை;பபதற் காகக் கூட்டுச் சேர்ந்தமையானது, இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாது,உலகத் தமிழர்களையும் வெறுப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கூட்டுக் கட்சிகளில் தமிழ் மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை அண்மைய தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தனித்து ஒரு கட்சியின் மேலாதிக்கம் இருப்பதே காரணமா கும் என்பதைத் தாங்களும் அறிந்திருப்பீர்கள். இந்த நிலை தொடருமானால், அடுத்து வரும் தேர்தல்களில் தென்னிலங்கையின் கட்சிகளே இங்கு பெரும்பான்மை யைப் பெறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளைத் தமிழர் நிலங்களில் நிறுவுதல் என்பன தங்கு தடையின்றி ஸ்ரீலங்கா அரசினதும் படையினரதும் அனுசரணையுடன் நடைபெறும். இத்தகைய ஒரு பாதகமான போக்கு தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குரியதாக்கி விடுவதுடன், தமிழ் மக்கள் தமக்கென இருந்த அடையாளத்தையும் இழந்து விடுவார்கள்.
இத்தகைய ஒரு அரசியல் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மீதான அதிருப்தி காரணமாகப் பிரிந்து சென்ற தமிழ் கட்சிகள் மக்களின் நலன் கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று தாங்கள் விடுத்த கோரிக்கையை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்தன. தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் தமிழர்கள் எல்லோரும் ஒரே அணியில் ஒன்றுபட்டு ஒரு பலம் மிக்க சக்தியாகத் திகழும் வாய்ப்பு ஏற்படும்.இதன் மூலம் எமது இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதுடன்,பலமான பேரம் பேசும் சக்தியாகி தமிழர் களின் சுய நிர்ணய உரிமை யும் உறுதிப்படுத்தப்படும்.ஆனால் பிளவுக்கு ஒரே காரணம் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்களின் விட்டுக்கொடுப்பற்ற போக்கும், சிறிலங்காவின் தேசியக் கட்சிகளைச் சார்ந்து நிற்கும் போக்குத்தான் என்பதை இன்று தாங்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தமிழினமும் உணர்ந்துள்ளன. இதனால் ஏற்பட்ட விரக்தியும்,கோபமும் சுயநலம் மிக்க அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய ஒரு புதிய தலைமையை எதிர்நோக்கி யிருந்தனர். இதனாலேயே தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட கட்சிகளை யும், சுயேட்சைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்று தந்தை செல்வாவினால் தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கட்சியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டது.அதன் பின்னர் 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் “தமிழீழம்” என்ற கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட பொழுது 97 வீதமான தமிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்ததால் அன்று மிகப் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்ந்தது. தந்தை செல்வாவின் மறைவின் பின்னர் அந்த ஒற்றுமையும் குலைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான பலம் வாய்ந்த ஒரு அரசியல் தலைமை இல்லாத நிலையில், நீண்ட இடை வெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் முயற்சியினால், மீண்டும் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி “தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்சி தோற்றுவிக்கப் பட்டது. அதன் பின்னரேயே பிரிந்து நின்ற தமிழர்கள் அனைவரும் ஒரே முடிவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது முழு ஆதரவையும் வழங்கி யிருந்தனர். ஆரம்பத்தில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது, தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF), தமிழ் காங்கிரசுக் கட்சி,ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே அங்கம் வகித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்திருந்தனர். அதன் பின்னரே இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (PLOT) வந்து சேர்ந்தனர். அன்று தேசியத் தலைவர் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரவணைத்து கடந்தகால கசப்பான சம்பவங்கள் எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களின் நலன் கருதி “தமிழ் தேசியக் கூட்டமைப்பை” உருவாக்கினார்.

ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் தமது வெற்றியை உறுதி செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையும் தேசியத் தலைவரின் பெயரையும் மேடைக்கு மேடை பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் தேர்தலகள் முடிந்தவுடன் அவற்றை யெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சிங்கள அரசுடன் இணக்க அரசியலை நடத்தத் தொடங்கி விட்டார்கள்.இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட தேசிய உணர்வு கொண்ட தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் கூட்டுக் கட்சியினரை ஓரங்கட்டி ஒரு நம்பிக்கைக் குரிய புதிய தலைமைத்துவத்தை நோக்கிய தமது பார்வையைச் செலுத்தத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஒரு கட்சியின் தனித்த தான்தோன்றித் தனமான போக்கின் காரண மாக தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட ஒற்றுமை முயற்சி சிதைந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்திலும்,தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைந்து விடக் கூடாது என்ற நோக்கிலும், தங்களிடம் எமது இந்தக் கோரிக்கையைக் கையளிக்;கின்றோம்.
தங்களிடம் இந்த மனுவைக் கையளிப்பவர்க ளில், எங்களில் இருவர் இலண்டனில் வதிவிடத்தைக் கொண்டு ஈழத் தமிழர்களின் நலன் கருதிப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஏனைய மூவரும் ஈழத்தில் பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும்,சமுகச் செயற்பாட்டு நிகழ்வு களிலும் தமது பங்கை ஆற்றி வருகின்றனர். ஆனால் மேலும் பலர் உள்ளுரிலும்,புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்த அமைப்பில் பங்காளிகளாக உள்ளனர்.

1. இலண்டனில் இருந்தும் ஏனைய புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக நாங்கள் பெருமளவு நிதியைத் திரட்டி இங்கு அனுப்பி வைத்திருந்தோம். ஆனால் அந்தப் பணம் ஒரு சிலரின் தனிப்பட்ட பைகளை நிரப்ப உதவியதே ஒழிய பொது நோக்கிற்காகச் செலவழிக்கப்படவில்லை என்பதுடன் கணக்கறிக்கைகள் கூட இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில்,அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறான பாதையில் செல்வதை நாங்கள் உணர்ந்துள்ள தால்,எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எவ்வித நிதியையும் அனுப்புவதில்லை என்றும் அவர்களை எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தங்களிடம் எமது வேண்டு கோள்களை முன்வைக்கின்றோம். இன்றைய எமது பிர்சசினைக்குத் தீர்வு காணக் கூடியவரும், தமிழ் மக்களுக்குச் சிறந்த தலமைத்துவத்தை வழங்கக் கூடியவருமாக தாங்களே தகுதியானவர் என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது புலம் பெயர்ந்து வாழும் எங்களைப் போன்ற தமிழர்களும் நம்புகின்றோம்.
2. வடமாகாணத்தில் வாழும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் அங்கிருந்து கொண்டு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் கணிசமான நிதியையும் இங்குள்ள பாடசாலை களின் அபிவிருத்திக்கு வழங்கி வருகின்றோம். இந்த நிலையில் தற்பொழுது தங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும், “முதலமைச்சர் நிதியம்” தொடர்பாக புலம் பெயர்ந்தவர்கள் என்ற வகையில் எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளோம். அது தொடர்பாகத் தங்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நாடி நிற்கின்றோம்.
3. மக்களின் செல்வாக்கும் ஆதரவும் தங்களுக்கே இருப்பதை உணர்ந்த பின்னரும் தங்களை நம்பிக்கை யில்லாப் பிரேரணை யைக் கொண்டு வந்து வெளியேற்ற முயற்சித்தும், அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாத நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது பற்றி தமிழரசுக் கட்சியினுள் இப்பொழுதே போட்டிகளும் ஆரம்பித்து விட்டன.ஆனால் அடுத்த முதல்வராகவும் தாங்களே வரவேண்டும் என்பதை ஈழத் தமிழர்களும்இபுலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாங்களும் விரும்புகின்றோம்.அடுத்த முதல்வர் யார் என்பதை இந்த மண்ணிலேயே நீண்டகாலமாக வாழ்ந்து பல்வேறு யுத்த அவலங்களினால் பாதிக்கப்பட்டு விடிவுக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களே தீர்மானிப்பர்.
4. இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக இதய சுத்தியுடன் குரல் கொடுத்துவரும் தாங்கள் தொடர்ந்தும் எமது மக்களுக்கான பலம்வாய்ந்த ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பின்வரும் முக்கியத்துவம் வாய்ந்த வேண்டுகோள்களை விடுக்கின்றோம்:
4.1. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியினரின் தன்னிச்சையான, சர்வாதிகாரப் போக்கின் காரணமாக மாற்றுத் தலைமை ஒன்று வேண்டும் என்று பிரிந்து சென்ற திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையிலான தமிழ் காங்கிரசுக் கட்சி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை மீண்டும் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒன்றிணைத்து ஒரு புதிய தமிழ்க் கூட்டமைப்பை உருவாக்கி பொதுச் சின்னம் ஒன்றில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே எமது மக்களின் பெரு விருப்பமாகும். அதேவேளை தற்பொழுது நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆசனப் பகிர்வில் முரண்பாடுகளைச் சந்தித்த தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவை இணைய விரும்பினால் அவர்களையும் ஒன்றிணைத்து பலமான சக்தியாக மாறும் வகையில் ஒரு புதிய தமிழ் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அல்லது எல்லோரும் விரும்பினால் தமிழ் மக்கள் பேரவையை அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக ஒரு பொதுச் சின்னத்தில் பதிவு செய்து அதற்குத் தாங்கள் தலைமை தாங்கவேண்டும்.ஆனால் அது எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
இந்த அரிய முயற்சியினூடாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மேற்குறித்த ஒற்றுமைக்கான முயற்சிகளைத் தாங்கள் விரைந்து மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்வம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று தாங்கள் ஈழத் தமிழர்களி னதும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களினதும் நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் உரியவாராக இருப்பதால் புதிதாகப் பதிவு செய்யப்படவுள்ள தமிழ் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி தமிழ் மக்களை வழி நடத்த வேண்டும். இத்தகைய ஒரு சாதகமான முடிவை அனைத்துத் தமிழர் கட்சிகளின் தலைவர்களும் தாயகத்திலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
4.3. அதேவேளை தங்களின் தலைமையை கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், பலம் வாய்ந்த அணிகளாகப் போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்களும் தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து மக்களுக்காக உழைக்க முன்வருவார்கள். எனவே தங்களுக்கு இருக்கும் பாரிய வேலைப் பளுக்களின் மத்தி யிலும் இந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தாங்கள் விரைவாக இந்த ஒற்றுமை முயற்சியை மேற்கொள்வீர்களாயின் நடைபெறப் போகின்ற மாகாண சபைத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும், தங்கள் தமைலமையிலான ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பு வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மை யைப் பெற்றுக் கொள்ளும்.இதனால் வேறு எந்த ஒரு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுடனோ, அல்லது அரசுக்குச் சார்பாகவே தொடர்ந்தும் இயங்கித் தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து வரும் கட்சிகளுடனோ கூட்டுச் சேரவேண்டிய அவல நிலை ஏற்படாது.
4.4. இவ்வாறான ஒரு ஒற்றுமை முயற்சியைத் தாங்கள் முன்னெடுத்து அனைத்துத் தமிழர் கட்சிகளின் தலைவர் களையும் அழைத்து ஒரே மேசையில் சந்திக்க வைத்து தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு முடிவை ஏற்படுத்து வீர்களாயின் அது எமது மக்களு க்குத் தாங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
4.5. தங்களின் இந்த நல்ல முயற்சியில் நல்லை ஆதீனக் குருமுதல்வர், ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள், கத்தோலிக்க மற்றும் தென்னிந்தி யத் திருச்சபைகளின் பேராயர்கள் ஆகியோரும் மற்றும் கல்வியாளர்களும் பங்களிப்புச் செய்யத் தயாராக இருப்பதால், இந்த ஒற்றுமை முயற்சியில் அவர்களையும் இணைத்துச் செயலில் இறங்குவீர்களாயின் நாம் பலமான ஒரு சக்தியாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
இந்த அரிய முயற்சியினூடாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மேற்குறித்த ஒற்றுமைக்கான முயற்சிகளைத் தாங்கள் விரைந்து மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here