சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய 5 ஆவது போட்டியில் நேற்றைய தினம் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டி மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்று, 5 விக்கெட்டுக்களால் கொல்கத்தா அணியை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை அணி 2 ஆவது முறையாக 200 ஓட்டங்களை விரட்டிபிடித்து சாதனை படைத்துள்ளது.