பிரதமரிடம் கோரிக்கைகளை கையளித்த கூட்டமைப்பு

0
454 views

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் , இன்று ரணிலிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூறி கூட்டமைப்பு கோரிக்கைகளை நேற்று பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் மக்களின் நீண்ட கால அவலமும் உடனடித் தேவைகளாகவும் உள்ள 10 விடயங்களை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் நிறைவேற்றி வழங்குவதாக எழுத்தில் சமர்ப்பித்தால் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

பிரதமர் தொடர்பான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டிய நிலைப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் எதிர்க் கட்சி அலுவலகத்துல்கூடி நீண்ட நேரம் ஆராய்ந்தனர். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் தனித்தனியே சந்தித்துக் கலந்துரையாடினர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் மாவை.சேனாதிராயா போன்றோர் கலந்துகொண்டபோதும் பிரதமரை கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இவற்றை ஏற்று பிரதமர் ஒப்பமிடும் சந்தர்ப்பத்தில் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

குறித்த கோரிக்கையில்

கூட்டு அரசிற்காக இணக்கம் தெரிவித்திருந்த அரசியல் யாப்பினை எதிர்வரும் மாகாண சபை அறிவிப்பிற்கு முன்னர் நிறைவு செய்து அதனை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றல்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பிரதேசத்தில் படைகள் வசம் தொடர்ந்ம் உள்ள நிலப்பரப்புக்களை விடுவித்தல்.

இதேகாலத்தில் சிறையில் வாடும்அரசியல் கைதிகளை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல்.

காணாமல் போனோரின் உறவுகள் கடந்த ஓராண்டாக வீதியில் உள்ள நிலையில் காணாமல்போனோர் செயலகம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லாதமையினால் அதற்கான பொறுப்புக்கூறலுடன் உரிய தீர்வினை கூறுதல்.

வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் தொழில் முயற்சி என்னும் பெயரில் குடியேற்ற முயற்சியோடு அப்பகுதி மக்களின் உரிமை மறுக்கப்படுவது தொடர்பில் நீண்டகாலமாக சுட்டிக்காட்டும் விடயத்திற்கு உரிய தீர்வு வழங்குதல்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றியுள்ள நிலையில் விசேடபாக வேலைவாய்ப்பு வழங்கி அதற்கான தீர்வை வழங்குவதோடு வடக்கு கிழக்கு பகுதிக்கு தெற்கில் இருந்து நியமனம் வழங்குவதனை நிறுத்துதல்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டத்திற்கும் தமிழ் அரச அதிபரை நியமிப்பதனை உறுதி செய்தல்.

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் திட்டங்கள் அபிவிருத்திகளின்போது மாகாண அரசின் கொள்கைகள் மிட்டங்களிற்கு முன்னுரிமை அளிப்பதோடு திட்டத்தயாரிப்பின் போதே கருத்தைப் பெறுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here