லண்டனில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வரலாற்றிலேயே பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் மட்டக்களப்பு பெண் என்ற பெருமையை மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் என்ற பெண் பெற்றுள்ளார்.
வோர் சைலட் கொலன்ட் என்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களின் மூலம் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலர் தாட்சாயிணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன்இ பயணம் குறித்து ஆலோசனையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.