பிரிட்டனில் இளைய தளபதி விஜயின் திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் 4 ஆவது தேசிய விருது விழாவுக்கான விருதுகள் பெறவுள்ள திரைப்படங்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் விருதுகளில் வெளிநாட்டு படப்பிரிவில் விஜயின் திரைப்படம் விருதினை பெற்று சென்றுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளில் அட்லீ இயக்கத்தில் வெளியாகும் முன்பும், வெளியாகிய பின்பும் பல விருதுகளை பெற்ற மெர்சல் திரைப்படம் இவ்விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது பிரிட்டனில் இத்திரைப்படத்திற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.