உதயசூரியன் உதைபந்தாட்ட தொடர் அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ் அணி…

0
837 views

உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் நேற்றைய போட்டியில் சைனிங்ஸ் அணி உதயசூரியன் அணியுடன் மோதியது.முதல்பாதியில் பிரசாந் 2 கோல்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார் உதயசூரியன் அணி 1 கோலை பெற ஆட்டம் 2:1 என காணப்பட்டது.
இரண்டாவது பாதியாட்டத்தில் சைனிங்ஸ் சார்பில் அன்பழகன்,சுரேன் தலா 1 கோல்களை போட்டனர்.உதயசூரியன் அணியும் 1 கோலை பெற்றது.
இறுதியில் 4:2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ் அணி…


ஆட்டநாயகனாக சைனிங்ஸ் வீரன் பிரசாந் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய முதலாவது போட்டியில் நேதாஜி மற்றும் இளங்கதிர் அணிகள் மோதின. இதில் இளங்கதிர் அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here