வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர், நடந்த, சபையின் முதலாவது அமர்வில், நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.
நகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோணலிங்கம் கருணானந்தராசாவின் பெயர் முன்மொழியப்பட்டது.
சுயேட்சைக் குழுவின் சார்பில், சபாரத்தினம் செல்வேந்திராவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கோணலிங்கம் கருணானந்தராசா 9 வாக்குகளைப் பெற்று, முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். சபாரத்தினம் செல்வேந்திராவுக்கு, 4 வாக்குகள் கிடைத்தன.
அதேவேளை, ஆறுமுகம் ஞானேந்திரன் பிரதி முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.