1948 ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்து நாடகத்துறையில் சிகரமாகத் திகழ்ந்து விளங்கிய கலாபூஷணம் வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்களின் 52 வருட சேவையை பாராட்டி வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2017 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதினை இன்று வழங்கி கெளரவித்திருக்கின்றது. இவரது கலைப்பணி மென்மேலும் தொடர்ந்து மிளிர பாராட்டி வாழ்த்துகின்றோம்.