மருதங்கேணியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டம்

0
519 views

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுத்திடம் கையளிக்கப்ட்டு மற்றும் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் உறவுகளைமீட்டுத்தருமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


இதே போன்று கடந்த பலமாதங்களாக மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்த உறவுகள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தின் இறுதியில் ஐநாவுக்கு அனுப்புவதற்கான மனு ஒன்றையும் மருதங்கேணி பிரதேச செயலர் எஸ்.கனகேஸ்வரனிம் ஒப்படைத்தனர்.
இப்போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here