மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்துவரும் படத்தை இயக்கிவருபவர் ஏ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையில், இன்னும் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை.
சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள். இப்படத்தின் வில்லன்களாக ராதா ரவி மற்றும் கருப்பையா நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இறுதிக்கட்டத்தை அடையும் விஜய் படத்தின் படப்பிடிப்பு,அவ்வப்போது விஜயின் சில புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் சற்று அதிருப்தியில் தான் பட குழு இருக்கிறார்கள். இந்த நிலையில், விஜய் 62 படத்தின் கதை பற்றி சில செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படம் விவசாயம் பற்றிய படமாம். சமூகத்தால் விவசாயிகள் இவ்வாறு முடக்க படுகிறார்கள் என்பதை இந்த படத்தின் மூலம் காட்டுகிறார்களாம். மேலும், இந்த படத்தில் விவசாயம் சம்மந்தப்பட்ட அரசியலும் பேசப்படுகிறதாம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.