கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்ததாக தெரிவித்தார்.